Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகள்; உக்ரைனுக்கு 4,940 கோடி டாலர் கடனுதவி

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகள்; உக்ரைனுக்கு 4,940 கோடி டாலர் கடனுதவி

உக்ரைனுக்கு 5,000 கோடி டாலர் கடன் வழங்க ஜி7 நாடுகள் 2024 அக்டோபரில் ஒப்புக்கொண்டன.

பகிரவும் WhatsApp Facebook

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட கடன் திட்டத்தின் கீழ், ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து உக்ரைன் 4,940 கோடி டாலர் பெற்றுள்ளது.

உக்ரைன் நிதியமைச்சகத்தின் தரவுகளின்படி, இத்தொகை இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில், 2026-ம் ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை ஜி7 நாடுகளிடமிருந்து மட்டும் உக்ரைனுக்குச் சுமார் 1,050 கோடி டாலர் கிடைத்துள்ளது.

உக்ரைனுக்கு 5,000 கோடி டாலர் கடன் வழங்க ஜி7 நாடுகள் 2024 அக்டோபரில் ஒப்புக்கொண்டன. அதன்படி, உக்ரைனுக்குக் கடன் நிதி வழங்கப்படும். முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துகளிலிருந்து எதிர்காலத்தில் கிடைக்கும் வருவாய், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும். இந்த ஏற்பாட்டின் கீழ் வழங்கப்பட்ட மொத்தத் தொகையில், நடப்பு ஆண்டில் ஜி7 நாடுகள் அளித்த நிதி மட்டும் சுமார் ஐந்தில் ஒரு பங்காக உள்ளது.

இந்த நிதி ஏற்பாட்டுக்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். அவ்வாறு வருவாயை மாற்றுவதை திருட்டு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

முந்தைய செய்தி
தீபாவளி - மல்லிகை கிலோ ரூ.1,800-க்கு விற்பனை
அடுத்த செய்தி
ஐ.நா. அமைதிப்படை தொடர்ந்து செயல்பட லெபனான் வலியுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்